பொது அறிவு

GENERAL STUDIES

 

தாள் - III

(Paper - III)

 

கால அளவு: மூன்று மணி நேரம்                                                                         மொத்த மதிப்பெண்கள்: 250

          Duration : 3 Hours                                                                                     Total Marks : 250           

                                

அறிவுரைகள்/Instructions

 

கீழ்க்கண்ட அறிவுரைகளை விண்ணப்பதாரர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்

(Candidates shall comply with the following instructions)

 

1. விண்ணப்பதாரர்கள், இவ்வினா விடைத்தாள் தொகுப்பு மொத்தம் 64 பக்கங்களாகக் கொண்டுள்ளது என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். இத்தொகுப்பில் ஏதேனும் குறைபாடிருப்பின், உடனடியாக வேறு தொகுப்பை தேர்வுக் கண்காணிப்பாளரிடம் கோரிப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

Candidates shall first ensure that this question-cum-answer booklet contains 64 pages. In case if any defect is found in this booklet, they can request for replacement from the invigilator immediately.

 

 

2. ஒவ்வொரு வினாவிற்கும் தனித்தனியாக விடை எழுதுவதற்கென இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு வினாவிற்கும் விடையளிக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விடையளிக்க வேண்டும். விடையளிக்க ஒதுக்கப்பட்ட கட்டத்திற்கு வெளியே எதையும் எழுதக்கூடாது.

Space has been provided to write the answer for each question. Candidates have to answer the questions only in the space provided for that question. Candidates should not write anything outside the box provided.

 

 

3. விண்ணப்பதாரர்கள் வினாத்தாளின் ஒவ்வொரு பிரிவிலும் அறிவுறுத்தப்பட்டுள்ள எண்ணிக்கையிலான வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்க  வேண்டும். அதற்கு மிகையான எண்ணிக்கையிலான வினாக்களுக்கு விடையளித்தால், ஒவ்வொரு பிரிவின் முடிவிலும் மிகையான எண்ணிக்கையில் விடையளிக்கப்பட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

 Candidates should answer as many number of questions as instructed in the question paper in each section. If more than the required number of questions are answered, the answers written at the end of each section will not be taken into account.

 

 

4. இவ்வினா – விடைத் தொகுப்பில் வினாக்கள் தமிழ் மற்றும் அங்கில வடிவங்களில் உள்ளன. அனைத்து இனங்களிலும் ஆங்கில வடிவில் தரப்பட்டுள்ள குறிப்புகளே முடிவானவை.

In this question-cum-answer booklet, questions are in Tamil and English versions. In all matters, English version is final.

 

 

5. இத்தேர்வை பொறுத்தவரை, அழகாக எழுதுவதற்காகவும், பிழையில்லாமல் எழுதுவதற்காகவும் தனியாக மதிப்பெண்கள் ஒதுக்கப்படவில்லை.

There is no reservation of marks for neatness of execution and correctness of spelling in respect of this examination.

 

 

6. விண்ணப்பத்தாரர்கள் இந்த வினா-விடைத் தொகுப்பிலிருந்து எந்தத் தாளையும் கிழித்துவிடக்கூடாது.

Candidates should not tear off any leaves from this question-cum-answer booklet.

 

 

7. விண்ணப்பதாரர்கள் கடித வடிவிலான வினாக்களுக்கு விடையளிக்கும் பொழுது தங்களது பெயரையோ, பதிவெண்ணையோ எழுதக்கூடாது. தங்களது பெயரில் கையொப்பமிடவும் அனுமதியில்லை. அவ்வாறான வினாக்களுக்கு பதிலளிக்கும்பொழுது வினாக்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரியையே பயன்படுத்த வேண்டும்.

      வினாக்களில் பெயர், முகவரி ஆகியவை குறிப்பிடப்படவில்லையெனில், “அனுப்புநர்”, “பெறுநர்” முகவரிகளில் அஆஇ அல்லது எக்ஸ் ஒய் இசட் அல்லது எக்ஸ் எக்ஸ் எக்ஸ் போன்ற பொதுப் பெயர்களை மட்டுமே எழுதவேண்டும்.

 

Candidates should not write their name or register number while answering letter type questions. Putting signature in their name is also not permitted. To answer such questions, the name & address given in the questions alone should be used.

If no name is given in the questions, they should write the general names like ABC or XYZ or XXX in ‘From’ and ‘To’ addresses.

 

அலகு I

UNIT - I

 

பிரிவு

SECTION — A

 

குறிப்பு:

Note:

i) ஒவ்வொரு வினாவிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடைளிக்கவும்

   Answer not exceeding 150 words each.

 

ii) ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண்கள்

     Each question carries ten marks

 

iii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு வினாக்களில் எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும;.

   Answer any three questions out of four questions

                                                                                                                                                            (3x10=30)

 

1) கடல் நீரின் உவர்ப்பியத்தை பாதிக்கும் காரணிகளை விளக்குக.

Explain the factors which affect the salinity of Ocean water. 

 

 

2. தமிழ்நாட்டின் முக்கிய பழங்குடியின மக்கட் குழுக்கள் பற்றி விவரிக்கவும்.

Describe in detail about the major tribal groups in Tamil Nadu.

 

 

3. கங்கை நதி தூய்மைப்படுத்துதல் தேசிய திட்டம் தேவை குறித்து விவாதிக்கவும்.

Discuss the need for the launching of the National Mission – ‘Clean Ganga’.

 

 

4. பெரியச் சமவெளிகள் இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நிலத்தோற்றங்கள் - நியாயப்படுத்துக.

Great plains are economically significant land forms in India - Justify.

 

 

 

பிரிவு

SECTION — B

குறிப்பு:

Note:

i)ஒவ்வொரு வினாவிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்

Answer not exceeding 250 words each.

 

ii) ஒவ்வொரு வினாவிற்கும் பதினைந்து மதிப்பெண்கள்

Each question carries fifteen marks.

 

iii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு வினாக்களில் எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்

 Answer any three  questions out of four questions.

(3x15=45)

 

5. இந்திய மண்வகைகளின் குணாதிசயங்கள் மற்றும் பரவலை விவரித்து மண் வள குன்றலுக்கான காரணங்களை பட்டியலிடுக.

Explain the characteristics and distribution of soil types in India and list out the causes of infertility of soils.

 

 

6. ”இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்” இஸ்ரோவினால் (ஐளுசுழு) ஏவப்பட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் குறித்து ஒரு விரிவான தொகுப்பு தருக.

Give a detailed account on various satellites launched by ISRO.

 

 

7. இந்திய மக்கட்தொகை பரவல் மற்றும் அடர்த்தியை பாதிக்கும் காரணிகளை விளக்குக.

Explain the factors which influence the distribution and density of population in India.

 

 

8. மண் அரிப்பின் வகைகள், காரணங்கள் மற்றும் விளைவுகள் குறித்து எழுதுக.

Write about the types, causes and effects of soil erosion.

 

அலகு – II

UNIT - II

 

பிரிவு - A

SECTION — A

 

குறிப்பு:

Note:

i) ஒவ்வொரு வினாவிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

 Answer not exceeding 150 words each.

 

ii) ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண்கள்

Each question carries ten marks.

 

iii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு வினாக்களில் எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

Answer any three questions out of four questions

(4x10=40)

 

9.  அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தட்பவெப்பநிலை மாற்றம் வளரும் நாடுகளின் பல்லாண்டு வளர்ச்சியை திருப்பிவிடும் எப்படி? விளக்குக.

If urgent steps are not taken, climate change will reverse decades of growth in the developing countries. How? Explain.

 

 

10. தேசிய வனக்கொள்கை (1988) யின் சிறப்பு அம்சங்கள் பற்றி விவரி.

Describe the salient features of the National Forest policy of 1988.

 

 

11. பருவநிலை மாற்றம் பவளப்பாறைகளை எவ்வாறு அச்சுறுத்துகிறது? பவள அமிலமயமாக்கத்தின் இயக்க முறையினை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.

How is climate change a threat to coral reefs? Explain the mechanism of coral acidification with suitable examples.

 

 

12. வளர்ச்சி திட்டங்களால் சுற்றுச்சூழல் அமைப்பின் வெவ்வேறு அங்கங்களில் ஏற்படும் தாக்கங்கள் பற்றி விவரிக்கவும்.

Discuss the possible impacts of various project activities on the components of Eco system.

 

 

பிரிவு-ஆ

SECTION — B

 

குறிப்பு:

Note:

 

i)ஒவ்வொரு வினாவிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

Answer not exceeding 250 words each.

 

ii) ஒவ்வொரு வினாவிற்கும் பதினைந்து மதிப்பெண்கள்

 Each question carries fifteen marks.

 

iii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு வினாக்களில் எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

Answer any three questions out of four questions

 (3 + 15 = 45)

 

13. சுற்றுச்சூழல் சீர்கேட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் முன்மொழியப்பட்ட குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை பற்றி குறிப்பு வரைக.

Describe the problems faced by the children due to deterioration in the environmental conditions and write notes on the “Proposed Children’s Environmental Health Program”.

 

 

14. நீர் மாசுபடுதல் என்றால் என்ன? அதை இந்திய சுற்றுச்சூழல் சட்டங்கள் மூலம் எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

What is water pollution? How can we control through Indian Environmental laws?

 

 

15.இந்தியாவில் எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் விளைவுகள் யாவை? பருவநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் COP 21-இல் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு இலக்கினை அடையும் பொருட்டு இந்தியா மேற்கொண்டுள்ள சமீபத்திய முனைவுகளின் சிறப்பம்சங்களை விவரிக்கவும்.

What are the environmental consequences of EL Nino impact in India? Discuss the salient features of the recent initiatives to accomplish India’s INDC in COP 21 to combat Climate change.

 

 

16. அனல் மின் நிலையங்களில் காற்று மாசுபடுதலை குறைக்க மேற்கொள்ளும் செயல்முறை மாற்றம் பற்றி விளக்குக..

Explain how ‘process changes’ can be adopted in thermal power plants to reduce the problem of air pollution.

 

அலகு III

UNIT - III

 

பிரிவு-அ

SECTION — A

 

குறிப்பு:

Note:

i) ஒவ்வொரு வினாவிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

Answer not exceeding 150 words each.

 

ii) ஒவ்வொரு வினாவிற்கும் பத்;து மதிப்பெண்கள்

 Each question carries ten marks.

 

iii) கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வினாக்களில் எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

Answer any four questions out of five questions

 (2 + 10 = 20)

 

17. இந்தியாவின் தேசிய வளர்ச்சிக் குழுமம் (NDC) அதன் குறிக்கோள்களை அடைய எவ்வாறு செயல்படுகிறது?

In India how does the National Development Council (NDC) function in order to achieve its objectives?                                                                             

 

18. தெற்காசிய மண்டல ஒத்துழைப்புச் சங்கமானது (SAARC) சில நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது எவ்வாறு அதன் நோக்கங்களை ஒட்டிச் செயல்பட்டு சில சாதனைகளை அடைந்தது என்பதை விவாதிக்கவும்.

“The South Asian Association for Regional Co-operation (SAARC) was established with certain objectives”. Discuss how it functioned in accordance with the objectives and elaborate its achievements?

 

 

19. வளர்ச்சிகுன்றிய நாடுகளில் வருமான சமத்துவமின்மையை குறைப்பதில் நிதி கொள்கையின் பங்கினை விளக்குக.

Explain the role of fiscal policy in reducing “Inequality of Income” in Underdeveloped countries.

 

 

20.இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை ஆராய்க.

Analyse the weaknesses of Science and Technology Infrastructure in India.

 

 

21.இந்திய வேளாண்மை விலைக் கொள்கையை நிர்ணயிக்கும் காரணிகளை பற்றி விளக்குக. மேலும் அக்கொள்கையின் செயல்பாடு மற்றும் நிறைவேற்றத்தினை விளக்குக.

Explain the factors which influence the agricultural pricing policy in India. Also explain the functioning and implementation of this policy.

 

 

பிரிவு-ஆ

SECTION — B

குறிப்பு:

Note:

i) ஒவ்வொரு வினாவிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

Answer not exceeding 250 words each.

 

ii) ஒவ்வொரு வினாவிற்கும் பதினைந்து மதிப்பெண்கள்

 Each question carries fifteen marks.

 

iii) கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வினாக்களில் எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

Answer any four questions out of five questions

 

22. பணவியல் கொள்கையின் நோக்கங்கள் யாவை? இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விளக்குக.

What are the objectives of Monetary Policy? Explain the functions of the Reserve Bank of India.

 

 

23. தமிழ்நாட்டின் தொடர் பொருளாதார வளர்ச்சிக்கு, உலக முதலீட்டாளர்களின் சந்திப்பு – 2019-ன் வெற்றி வாய்ப்பினை ஆராய்க.

Examine the prospects of Global Investors Meet - 2019 for the sustained economic development of Tamil Nadu.

 

 

24. சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றி தீர ஆய்க (SEZs)

Critically analyse the Special Economic Zones (SEZs)

 

 

25. பணவீக்கம் இடைவெளியை விளக்குக. மற்றும் எப்படி பணவீக்கம் இடைவெளியை கட்டுப்படுத்த முடியும் என்பதையும் விளக்குக.

Explain inflationary gap and also explain how can the inflationary gap be wiped out.

 

 

26”இந்தியா வளர்ச்சியடையாத நாடு” இதை ஒப்புக் கொள்வீரா? இல்லையெனில் அதற்கான காரணங்களை தருக மற்றும் இந்தியப் பொருளாதாரத்தின் சிற்ப்பியல்புகளை விளக்குக.

"India is an Under-developed country" - Do you agree with this. If no, give reasons for it and describe the salient features of the Indian economy.

 

Quick Access Links