பொது அறிவு

GENERAL STUDIES

 

தாள் - I

(Paper - I)

 

 

கால அளவு: மூன்று மணி நேரம்                                                                    மொத்த மதிப்பெண்கள்: 250

Duration : 3 Hours                                                                                                          Total Marks : 250           

                                

Instructions

 

கீழ்க்கண்ட அறிவுரைகளை விண்ணப்பதாரர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்

(Candidates shall comply with the following instructions)

 

1. விண்ணப்பதாரர்கள், இவ்வினா விடைத்தாள் தொகுப்பு மொத்தம் 64 பக்கங்களாகக் கொண்டுள்ளது என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். இத்தொகுப்பில் ஏதேனும் குறைபாடிருப்பின், உடனடியாக வேறு தொகுப்பை தேர்வுக் கண்காணிப்பாளரிடம் கோரிப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

Candidates shall first ensure that this question-cum-answer booklet contains 64 pages. In case if any defect is found in this booklet, they can request for replacement from the invigilator immediately.

 

 

2. ஒவ்வொரு வினாவிற்கும் தனித்தனியாக விடை எழுதுவதற்கென இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு வினாவிற்கும் விடையளிக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விடையளிக்க வேண்டும். விடையளிக்க ஒதுக்கப்பட்ட கட்டத்திற்கு வெளியே எதையும் எழுதக்கூடாது.

Space has been provided to write the answer for each question. Candidates have to answer the questions only in the space provided for that question. Candidates should not write anything outside the box provided.

 

 

3. விண்ணப்பதாரர்கள் வினாத்தாளின் ஒவ்வொரு பிரிவிலும் அறிவுறுத்தப்பட்டுள்ள எண்ணிக்கையிலான வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்க  வேண்டும். அதற்கு மிகையான எண்ணிக்கையிலான வினாக்களுக்கு விடையளித்தால், ஒவ்வொரு பிரிவின் முடிவிலும் மிகையான எண்ணிக்கையில் விடையளிக்கப்பட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

 Candidates should answer as many number of questions as instructed in the question paper in each section. If more than the required number of questions are answered, the answers written at the end of each section will not be taken into account.

 

 

4. இவ்வினா – விடைத் தொகுப்பில் வினாக்கள் தமிழ் மற்றும் அங்கில வடிவங்களில் உள்ளன. அனைத்து இனங்களிலும் ஆங்கில வடிவில் தரப்பட்டுள்ள குறிப்புகளே முடிவானவை.

In this question-cum-answer booklet, questions are in Tamil and English versions. In all matters, English version is final.

 

 

5. இத்தேர்வை பொறுத்தவரை, அழகாக எழுதுவதற்காகவும், பிழையில்லாமல் எழுதுவதற்காகவும் தனியாக மதிப்பெண்கள் ஒதுக்கப்படவில்லை.

There is no reservation of marks for neatness of execution and correctness of spelling in respect of this examination.

 

 

6. விண்ணப்பத்தாரர்கள் இந்த வினா-விடைத் தொகுப்பிலிருந்து எந்தத் தாளையும் கிழித்துவிடக்கூடாது.

Candidates should not tear off any leaves from this question-cum-answer booklet.

 

 

7. விண்ணப்பதாரர்கள் கடித வடிவிலான வினாக்களுக்கு விடையளிக்கும் பொழுது தங்களது பெயரையோ, பதிவெண்ணையோ எழுதக்கூடாது. தங்களது பெயரில் கையொப்பமிடவும் அனுமதியில்லை. அவ்வாறான வினாக்களுக்கு பதிலளிக்கும்பொழுது வினாக்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரியையே பயன்படுத்த வேண்டும்.

      வினாக்களில் பெயர், முகவரி ஆகியவை குறிப்பிடப்படவில்லையெனில், “அனுப்புநர்”, “பெறுநர்” முகவரிகளில் அஆஇ அல்லது எக்ஸ் ஒய் இசட் அல்லது எக்ஸ் எக்ஸ் எக்ஸ் போன்ற பொதுப் பெயர்களை மட்டுமே எழுதவேண்டும்.

 

Candidates should not write their name or register number while answering letter type questions. Putting signature in their name is also not permitted. To answer such questions, the name & address given in the questions alone should be used.

If no name is given in the questions, they should write the general names like ABC or XYZ or XXX in ‘From’ and ‘To’ addresses.

 

 

அலகு I

UNIT - I

 

பிரிவு

SECTION — A

குறிப்பு:

Note:

   i) ஒவ்வொரு வினாவிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடைளிக்கவும்

       Answer not exceeding 150 words each.

 

   ii) ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண்கள்

      Each question carries ten marks

 

  iii) கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வினாக்களில் எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

     Answer any four questions out of five questions

                                                                                                                                                (4x10=40)

 

1. நமது தேசிய இலச்சினை பற்றி விளக்குக. மேலும் இந்திய தேசிய இயற்கைச் சின்னங்களை வரிசைப்படுத்துக.

Explain about our National Emblem and list out our National Natural Symbols of India.

 

 

2. மதுரை காந்தி என அழைக்கப்பட்டவர் யார்? அவரது சாதனைகளை வரிசைப்படுத்துக.

Who was popularly called as Madurai Gandhi? Enumerate his achievements.

 

 

3. 1773-ம் ஆண்டு ஒழுங்கு முறைச்சட்டத்தின் முக்கிய சரத்துக்களை விவாதி.

Discuss the important provisions of the Regulating Act of 1773.

 

 

4. மக்களை தேசிய இயக்கத்தில் பங்குபெற செய்திட காந்தியடிகள் ஆரம்பித்த பல்வேறு இயக்க நடவடிக்கைகளைப் பற்றி விவாதி.

Discuss the various movements started by Gandhiji to draw the participation of mass into National movement.

 

 

5. காலனியாதிக்கத்தின் கீழ் இந்தியாவில் ஏற்பட்ட விவசாய எழுச்சிகளை விவரி.

Describe the Peasant uprisings during colonial rule in India.

 

 

பிரிவு – ஆ

SECTION — B

 

குறிப்பு:

Note:

     i) ஒவ்வொரு வினாவிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்

        Answer not exceeding 250 words each.

  

    ii) ஒவ்வொரு வினாவிற்கும் பதினைந்து மதிப்பெண்கள்

       Each question carries fifteen marks.

 

   iii) கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வினாக்களில் எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்

        Answer any four  questions out of five questions.                                                                          (4x15=60)

 

 

6. 1935-ஆம் ஆண்டு இந்திய அரசாங்க சட்டத்தின் குறைகளை ஆராய்க.

Critically analyse the defects of the Government of India Act 1935.

 

 

7.இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாக கிராமப்புற பொருளாதாரம் சீரழிந்தது – திறனாய்வு செய்.

There was a disintegration of Rural Economy due to the impact of British Rule in India – Analyse.

 

 

8. சமூக நீதியின் மேம்பாட்டிற்கு பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய பங்கினை மதிப்பிடுக.

Evaluate the contribution of Periyar E.V.R. in the promotion of Social Justice.

 

 

9.இந்திய தேசிய காங்கிரஸ் வெறும் கட்சி மட்டும் அல்ல இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கம் - திறனாய்வு செய்.

The Indian National Congress was not merely a party, but an integral part of the Indian National Movement – Analyse.

 

 

10. ஐரோப்பிய படையெடுப்பின் துவக்க கால கட்டத்தில், இந்தியர்கள் பழமையான போர் நடவடிக்கைகளுக்கு முன் ஆங்கில கடல் ஆதிக்கம் எவ்வாறு உயர்ந்திருந்தது என்பதை விளக்குக.

During the Advent of European invasion – Explain how the naval force of the English became superior before the outmoded Indian Warfare.

 

 

அலகு II

 

பிரிவு

SECTION — A

குறிப்பு:

Note:

    i)ஒவ்வொரு வினாவிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

      Answer not exceeding 150 words each.

 

   ii) ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண்கள்.

     Each question carries ten marks.

 

   iii) கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வினாக்களில் எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

     Answer any four questions out of five questions                                                                             (4x10=40)

 

11. இந்தியாவில் பெண்களுக்கான குறைதீர்க்கும் முறைகளை ஆராய்க.

Examine the Grievance Redressal mechanisms for women in India.

 

 

12. குழந்தை உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையானது எந்த மாதிரியான செயல்களை கண்காணிக்கிறது?

What are the activities monitored by the National Commission for Protection of Child Rights (NCPCR)?

 

 

13. இந்தியாவில், அரசு சாரா நிறுவனங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்த எந்த வகையான திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்?

What are all the different types of schemes taken up by Non-Governmental Organisations to control population explosion in India?

 

 

14. இந்திய அரசியலமைப்பில் பெண்களுக்கான விதிகளை பற்றி விவரி.

Describe the constitutional provisions for women in India.

 

 

15. நக்சல் பாரி இயக்கத்தின் நோக்கங்களைக் கொணர்க.

Bring out the objectives of Naxal bari movement.

 

 

பிரிவு-ஆ

SECTION — B

குறிப்பு:

Note:

   i) ஒவ்வொரு வினாவிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

      Answer not exceeding 250 words each.

 

 ii) ஒவ்வொரு வினாவிற்கும் பதினைந்து மதிப்பெண்கள்

     Each question carries fifteen marks.

 

iii) கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வினாக்களில் எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

    Answer any four questions out of five questions.                                                                            (4 + 15 = 60)

 

 

16. குடும்ப வன்முறை தனிநபர் பிரச்சனையா அல்லது சமூகப் பிரச்சனையா?  விவாதிக்க.

Is Domestic Violence a Private issue or a Social problem? Discuss.

 

 

17.இந்திய பொருளாதார கட்டமைப்பு வேலை வாய்ப்பை அதிகரிக்கிறதா – விவரி.

Does the structure of the Indian Economy promote employment opportunities –Discuss.

 

 

18. தற்கால இந்தியா சமூகத்தில் கல்வியறிவு திட்டங்களின் பலம் மற்றும் பலவீனங்களை விளக்குக.

Explain the strengths and weaknesses of literacy programmes in the contemporary Indian Society.

 

 

19. இந்தியாவில் பெண்கள் தகவல் மற்றும் செய்தி தொடர்பு தொழில்நுட்பத்தால் அதிகாரம் பெற்றுள்ளார்களா? பகுப்பாய்வு செய்க.

In India, are women empowered through Information and Communication Technology? Analyse.

 

 

20. இந்தியாவில் மத சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் முக்கியமான சமூகப் பிரச்சனைகளைப் பகுப்பாய்வு செய்க.

Analyse the major social problems faced by the Religious minorities in India.

 

 

அலகு III

UNIT - III

 

பிரிவு-அ

SECTION — A

குறிப்பு:

Note:

 

i) ஒவ்வொரு வினாவிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

    Answer not exceeding 150 words each.

 

ii) ஒவ்வொரு வினாவிற்கும் பத்;து மதிப்பெண்கள்.

    Each question carries ten marks.

 

iii) கொடுக்கப்பட்டுள்ள மூன்று வினாக்களில் எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

    Answer any two questions out of three questions.                                                                                                        (2 + 10 = 20)

 

 

21. (A) குமார் என்பவர் 2 மணி நேரத்தில் 70 கி.மீ தூரம் கடக்கிறார் எனில் அதே வேகத்தில் சென்றால் 8 மணி நேரத்தில் எவ்வளவு தூரம் கடந்து இருப்பார்?

(B) 24 மாணவர்களுக்கு சீரூடை வழங்க ரூ.6000 செலவாகும் எனில் ரூ.72000-க்கு எத்தனை மாணவர்களுக்குச் சீருடை வழங்கலாம்?

(a) Kumar takes 2 hours to travel 70 km. How much distance will he travel in 8 hours?

(b) The cost of uniforms for 24 students is 6,000. How many students can get uniform for 72,000?             (5+5)                                                   

 

22. ஒரு கொள்கலனில் 3 மஞ்சள் மற்றும் 4 பச்சை நிறப்பந்துகள் உள்ளன. திரும்ப வைக்குமாறு சம வாய்ப்பு முறையில் 3 முறை பந்துகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுக்கும்போது கிடைக்கும் பச்சை நிறப் பந்துகளின் எண்ணிக்கையின் நிகழ்தகவுப் பரவலைக் காண்க. மேலும் சராசரி, பரவற்படி ஆகியவற்றைக் காண்க.

An Urn contains 3 Yellow and 4 Green balls. Find the probability distribution of the number of Green balls in three draws when a ball is drawn at random with replacement. Also find its mean and variance.                (10)

 

 

23. இரண்டு கைக்கடிகாரங்கள் ஒவ்வொன்றையும் ரூ.594-க்கு ஒருவர் விற்றார். இவ்வாறு விற்றதில் ஒன்றில் 10% லாபமும் மற்றதில் 10மூ நட்டமும் அவருக்கு ஏற்பட்டது. மொத்தத்தில் அவருக்கு ஏற்பட்ட இலாபம் அல்லது நட்ட சதவீதத்தைக் காணவும் ;.

A man sells two wrist watches at Rs. 594 each. On one he gains 10% and on the other he loses 10%. Find his gain or loss percent on the whole.               (10)

 

பிரிவு-ஆ

SECTION — B

குறிப்பு:

Note:

 

i) ஒவ்வொரு வினாவிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

   Answer not exceeding 250 words each.

 

ii) ஒவ்வொரு வினாவிற்கும் பதினைந்து மதிப்பெண்கள்

     Each question carries fifteen marks.

 

iii) கொடுக்கப்பட்டுள்ள மூன்று வினாக்களில் எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

     Answer any two questions out of three questions

 

24. ஒரு மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.21 என்க. பொறிறியல் கல்லூரியில் சேர்க்கை கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.26 மற்றும் இரு கல்லூரிகளிலும் சேர்க்கை கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.12 எனில்,

 

(அ) மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு கல்லூரியில் சேர்க்கை கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க.

 

(ஆ)மருத்துவக் கல்லூரியில் மட்டுமோ அல்லது பொறியியல் கல்லூரியில் மட்டுமோ சேர்க்கை கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க.

 

The probability that a girl will be selected for admission in a medical college is 0.21. The probability that she will be selected for admission in an engineering college is 0.26 and the probability that she will be selected in both is 0.12.                                                                                                                                                

(a) Find the probability that she will be selected in atleast one of the two colleges.

(b) Find the probability that she will be selected either in a medical college only or in an engineering college only.

 

 

25. 89  , 1027,3281  ஆகியவற்றின் மீ.பொ.க (HCF) மற்றும் மீ.பொ.ம (LCM) காண்க.

Find the HCF and LCM of  89  , 1027 and 3281                                                                                                           (15)

 

 

26. (அ) இரு எண்களுக்கு இடையே உள்ள வேறுபாடு 5, அவற்றின் வர்க்கங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு 75 எனில் அவ்விரு எண்களின் பெரிய மதிப்பு யாது?

 

(ஆ) ஒரு சரிவகத்தின் பரப்பு 160 செ.மீ2. அவற்றின் இணைபக்கங்கள் 2:3 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. அவற்றிற்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு 16 செ.மீ எனில், அதில் சிறிய பக்கத்தின் நீளம் யாது?

 

(a) The difference between two numbers is 5 and the difference between their squares is 75, find the larger number.      (7½)

 

(b) The area of a trapezium is 160 cm2. If its parallel sides are in ratio 2 : 3 and the perpendicular distance between them is 16 cm, find the smaller of parallel sides.          (7½)

 

 

Quick Access Links